இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியது உலக வங்கி!

வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (12:25 IST)
கொரோனா பாதிப்புகளுக்காக இந்தியாவிற்கு அவசரகால நிதி ஒதுக்கியுள்ளது உலக வங்கி.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதிலும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 58 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் அவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்யவும், மருத்துவ உபகரணங்கள் உள்ளிடவற்றை வாங்கவும் பெரும் நிதி தேவைப்படும் சூழலில் மக்களிடமும் நிதி கோரப்பட்டுள்ளது. உலக வங்கியிடம் அவசரகால நிதியை இந்தியா கோரியிருந்த நிலையில் தற்போது உலக வங்கி அந்த தொகையை அளித்துள்ளது.

அவசரகால நிதியாக 1 பில்லியன் (இந்திய மதிப்பில் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய்) அளித்துள்ளது உலக வங்கி. இந்த தொகை இந்தியாவின் தேவைக்கு மிக குறைவான அளவே என்றாலும் இதை வைத்து மேற்கொண்டு மருத்துவ வசதிகளுக்கான ஏற்பாடுகளை செய்யலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்