அயோத்தி ராமர் கோவிலில் போஜ்புரி குத்தாட்டம்! – பெண் காவலர்கள் சஸ்பெண்ட்!

வெள்ளி, 16 டிசம்பர் 2022 (13:26 IST)
அயோத்தியில் ராமர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலர்கள் குத்தாட்டம் போட்டு ரீல்ஸ் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் ராமஜென்ம பூமி அறக்கட்டளை மூலமாக பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றது. இந்த கோவில் பணிகள் முடிந்து வரும் 2023ம் ஆண்டில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதுபோல பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயம் பெண் காண்ஸ்டபிள் மூவர் போஜ்புரி பாடல் ஒன்றுக்கு நடனமாட அதை மற்றொரு பெண் காவலர் வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பாதுகாப்பு பணியின்போது சினிமா பாடலுக்கு நடனமாடிய 4 பெண் போலீஸும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்