டென்னிஸ் விளையாட வந்த பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய காவலர்கள்

வியாழன், 12 நவம்பர் 2015 (16:55 IST)
பெங்களூரில் டென்னிஸ் கிளப்பில் உறுப்பினராக வந்த ஒரு பெண்ணை இரண்டு காவலர்கள் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பெங்களூருக்கு அடுத்த தும்கூர் நகரைச் சேர்ந்தவர் 30 வயது மதிக்கத்தக்க பெண், கடந்த 11 ஆம் தேதி பெங்களூர் கப்பர் பார்க் பகுதியிலுள்ள டென்னிஸ் கிளப்பில், உறுப்பினராக இணைவதற்காக வந்துள்ளார். அதற்கான ஆவணங்களை நிரப்பி கொடுத்துள்ளார். ஆனால் இன்னும் சில ஆவணங்களை நிர்வாகம் கேட்க, அவர் பெங்களூரிலேயே தங்க முடிவெடுத்துள்ளார்.
 
இரவு 9.30 மணியளவில் அவரை பார்க்கிலிருந்த இரண்டு காவலர்கள் வெளியேற சொல்லியிருக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு வெளியேறும் வழியை காட்டுவதாக கூறி அவருடன் சென்றுள்ளனர். திடீரென சித்தலிங்கையா சர்க்கிள் பகுதிக்கு அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று மிரட்டி கற்பழித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண் கப்பன்பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை அதிகாரிகள் அந்த இரண்டு காவலர்களையும் கைது செய்துள்ளனர்.
 
அந்த இரண்டு காவலர்களும் அசாம் மாநிலைத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் பின்புலம் பற்றிய தகவலை செக்யூரிட்டி ஏஜென்சியிடம் போலிசார் விசாரித்து வருகிறார்கள். 
 
டெல்லியை தொடர்ந்து, பெங்களூரிலும் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி வருவதால் பெங்களூர் வாசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்