பெங்களூரில் நடைபெற்ற ஒரு அரசு விழாவில், மேடையில் இருந்த பெண், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் கன்னத்தில் தீடீரெனெ முத்தமிட்ட விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் சமீபத்தில்தான் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு 14 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால் பதவி இழந்த அமைச்சர்கள், சித்தராமையாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்நிலையில், சித்தராமையா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது, கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் பெங்களூரில் உள்ள பேலஸ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சித்தராமையா கலந்து கொண்டார்.
அனைத்து உறுப்பினர்களும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்தனர். அப்போது கிரிஜா ஒரு பெண் உறுப்பினர், யாரும் எதிர்பார்க்காத வகையில் சித்தராமையாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். சித்தராமையாவும் அதிர்ச்சியடையாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டார். அதன்பின் கூறும்போது, அந்த பெண் என் மகள் போன்றவர் என்றார்.