விபச்சாரத்தில் ஈடுபடுவது குற்றம் இல்லை; உயர்நீதிமன்றம் அதிரடி

சனி, 6 மே 2017 (20:45 IST)
குஜராத் மாநிலம் சூரத் நகரில் கைதுச்செய்யப்பட்ட வினோத் என்ற நபர் தொடர்ந்த வழக்கில், பாலியல் தொழில் விருப்பப்பட்டு ஈடுப்படுவது குற்றம் இல்லை என குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


 

 
ஜனவரி மாதம் குஜராத் மாநிலம் சூரத் நகரில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட பெண்கள் மற்ற்றும் வாடிக்கையாளர்கள் கைது செய்யபட்டனர். இதையடுத்து கைதுச்செய்யப்பட்ட வினோத் எனற நபர் குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொரட்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விருப்பத்தின் பேரில் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுப்படுவது குற்றமில்லை என கூறி வினோத என்பவர் விடுதலை செய்தனர். மேலும், வலுக்கட்டாயமாக ஒருவரை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதுதான் குற்றம் என தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்