இந்த கருத்து கணிப்பின்படி, குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் சம் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. குஜராத்தில் பாஜக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நீடித்து வருகிறது.
இந்நிலையில் இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் பாஜகவுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாக உள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் இரு கட்சிகளும் 43% வாக்குகளை பெற்று சமநிலையில் உள்ளது. இதன் மூலம், பாஜகவின் வாக்கு சதவிதம் 16% குறைந்துள்ளது.