திருப்பதி கோயிலில் மே மாத தரிசனத்திற்காக டிக்கெட் எப்போது வெளியீடு? - தேவஸ்தானம் தகவல்

திங்கள், 24 ஏப்ரல் 2023 (16:33 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் மே மாதம் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்வதற்காக ரூ.300 தரிசன  நுழைவு கட்டண டிக்கெட் வெளியிடப்படவுள்ளது.

ஆந்திர மாநிலம் திருமமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் மே மாதம் தரிசிப்பதற்கான ரூ. 300 நுழைவு கட்டண டிக்கெட்  நாளை   வெளியிடப்படவுள்ள நிலையில், இதுகுறித்து, திருப்பதி  திருமலை  தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை காலை 10 மணிக்கு https.//tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் வெளியாகவுள்ளது.

அதேபோல், TTdevasthanams என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியிலும் டிக்கெட் பதிவு செய்யலாம் எனவும்,  திருமலையில் பக்தர்கள் மே மாதம் தங்குவதற்காக அறைகள் முன்பதிவு  25 ஆம் தேதி காலை 10 மணிக்கும், திருப்பதியில் உள்ள அறைகள் ஏப்ரல் 27 ஆம் தேதிக்கு காலை 10 மணிக்கும் வெளியிடப்பட உள்ளது.

மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுக்குத் தேவையான டிக்கெட் மற்றும் அறைகள் முன்பதிவு செய்யலாம் என்று அதிக் கூறப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்