மாணவர்களுடன் ஆசிரியர் தினவிழா கலந்துறையாடல்: அரசியல் குறித்து மோடி என்ன பேசினார்?

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (15:57 IST)
பிரதமர் நரேந்திர மோடி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று மாணவர்களுடன் கலந்துறையாடினார்.  மாணவர்களின் எதிகாலத்தை சிறப்பாக வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பணி முக்கிய பங்குவகிக்கிறது என கூறினார். மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்த அவர் அரசியல் குறித்து பேசும் போது

1. ஒரு தலைவராக நீங்கள் மக்களுடன் இணைந்திருக்க வேண்டும். மக்களின் வலிகள் உங்களை இரவில் தூங்க விடாது.

2. ஏன் நீங்கள் தேர்தலில் போடியிட்டு வெற்றி பெற்று தலைவராக வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வெண்டும்.

3. நாட்டின் வளர்ச்சி குறித்து நீங்கள் உணர ஆரம்பித்தால் சிறந்த தலைவராக சரியான பாதையில் நீங்கள் உங்கள் வழியில் செல்கிறீர்கள்.

4.துரதிருஷ்டவசமாக மக்கள் சேவை, அரசியல் பற்றி மக்களிடம் பொதுவாக தவறான கருத்துக்கள் நிறைய உள்ளன.

5. திறமையான மக்கள் அரசியலின் அனைத்து துறைகளிலும் தேவைப்படுகிறார்கள் என்று அரசியல் குறித்து பேசினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்