அப்போது குறுக்கிட்டு பேசிய காங்கிரஸ் எம்பி சசிதரூர், '22 நாடுகளில் பேசப்பட்டு வரும் உருது மொழி, ஐநாவில் அலுவல் மொழியாக இல்லை. ஒரே ஒரு நாடு பேசும் இந்தியை ஐநாவில் அலுவல் மொழியாக்க வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் மோடி ஐநாவில் இந்தியில் பேசினார் என்பதை பெருமையாக கூறுகின்றீர்கள். ஆனால் எதிர்காலத்தில் தமிழகத்தில் இருந்தோ அல்லது பெங்களூரில் இருந்தோ பிரதமர் தேர்வு செய்யப்பட்டால் அவர்கள் எப்படி இந்தி பேசுவார்கள்?
இந்தி மொழிக்குரிய பெருமைகளை நான் மதிக்கின்றேன். அதே நேரத்தில் இந்தி பேசாத மக்களும் இந்த நாட்டின் பெருமைக்குரியவர்கள்தான். எனவே நேரத்தையும் பணத்தையும் வீணடித்து இந்தி மொழியை ஐநா அலுவல் மொழியாக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம்' என்று சசிதரூர் பாராளுமன்றத்தில் பேசினார். இவர் ஐநாவில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சசிதரூரின் இந்த கருத்தால் சுஷ்மா ஸ்வராஜ் அதிர்ச்சியில் உறைந்து அமைதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.