தண்ணீர் பஞ்சம் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தண்ணீர் பஞ்சம் நிலைமை சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேபோல் தனியார் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் வொர்க் ப்ரம் ஹோம் முறையை கேட்டு வருவதாகவும் இதற்கு தனியார் நிறுவனங்களை நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே பெங்களூரு நகரில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வொர்க் ப்ரம் ஹோம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.