மேற்கு வங்க அரசு பணம் தர முன்வந்தது.. மம்தா பொய் சொல்கிறார்.. மாணவியின் பெற்றோர்.!

Mahendran

செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (10:52 IST)
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்த பிரச்சனையை பெரிதாகாமல் இருக்க மேற்கு வங்க அரசு மாணவியின் பெற்றோருக்கு பணம் கொடுக்க முன் வந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது குறித்து கூறிய போது மாணவியின் பெற்றோருக்கு பணம் கொடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை என்றும் இது எதிர்க்கட்சிகளின் அவதூறு குற்றச்சாட்டு என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தங்களுக்கு பணம் கொடுக்க மேற்குவங்க அரசு முன் வந்தது உண்மைதான் என்றும் ஆனால் அந்த பணத்தை நாங்கள் வாங்க மறுத்து விட்டதாகவும் மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மம்தா பானர்ஜி பொய் சொல்வதாகவும் எங்களுடைய மகள் திரும்ப வரப்போவதில்லை அவளது பெயரில் நான் பொய் சொல்ல மாட்டேன் என்றும் நாங்கள் பணம் பெற்றுக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி எங்களிடம் கூறினார் என்றும் உங்கள் மகள் நினைவாக ஏதாவது உருவாக்குகிறோம் என்று தெரிவித்தார் என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பணம் நாங்கள் வாங்க மாட்டோம் என்றும் எனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைத்தவுடன் உங்களுடைய அலுவலகத்துக்கு வந்து பணத்தை பெற்றுக் கொள்கிறோம் என தெரிவித்ததாகவும் மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்