2014-15 நிதிநிலை அறிக்கை: பெண்களின் நலனுக்கு முன்னுரிமை - அருண் ஜெட்லி

வியாழன், 10 ஜூலை 2014 (16:02 IST)
2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய அரசு பெண் குழந்தைகளின் நலனுக்கு  முன்னுரிமை அளித்து வருவதாக குறிப்பிட்டார்.
 
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அர‌சி‌ன் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தா‌க்க‌ல் செய்தார். 
 
நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அருண் ஜெட்லி, பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு சிறப்பு சிறு சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும், பெண் குழந்தைகளின் வாழ்க்கை தரம் உயர்வதற்காகவும், அவர்களது மேம்பாட்டிற்காகவும் சிறப்பு சேமிப்புத் திட்டம்  செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
 
மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 4 விழுக்காடு வட்டியில் கடன் 100 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்படும் எனக் குறிப்பிட்ட அவர், பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில், பொது போ‌க்குவர‌த்‌தி‌ல் பய‌ணி‌க்கு‌ம் பெண்கள் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்