15 தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து அரசுக்கு வர வேண்டிய நிலுவை தொகை 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ஆகும். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் கடந்த 17 ஆம் தேதி அரசுக்கு 2500 கோடி ரூபாய் நிலுவை தொகையை செலுத்தியது. அதனைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் நிலுவை தொகையில் 3500 கோடி ரூபாயை செலுத்தியுள்ளதாக் தெரிகிறது.
இந்நிலையில், அரசுக்கு செலுத்த வேண்டிய மீதத்தொகையை அடுத்த 15 ஆண்டுகளில் தவணை முறையில் செலுத்த வாய்ப்பளிக்குமாறும் வோடபோன் கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு, மொத்த வருவாயில் 8 விழுக்காடாக உள்ள கட்டணத்தை 3 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.