அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சு: மக்களவை சபாநாயகரிடம் புகார்

வெள்ளி, 4 அக்டோபர் 2019 (06:28 IST)
மக்களவை எம்பியான மாணிக்கம் தாகூர் அவர்களை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமையிலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களிடம் மாணிக்கம் தாகூர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சபாநாயகர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

கடந்த சில நாட்களுக்கு முன் விருதுநகரில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது விருதுநகர் எம்பி மாணிக் தாக்கூர் அவர்களை பன்னிக்குட்டி என்றும், ரப்பர் துப்பாக்கியால் அவரை வயிற்றிலேயே சுட வேண்டும் என்றும் பேசினார். மேலும் மாணிக்கம் தாகூரை ஒருமையிலும் விமர்சனம் செய்தார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை இவ்வாறு அவதூறாக பேசுவது குற்றம் என்றும் இதுகுறித்து நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு மூலம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மாணிக்கம் தாகூர் எம்.பி. முறையிட்டுள்ளார். கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டு அமைச்சர் தன்னை விமர்சனம் செய்ததாகவும், அது தமக்கு மிகுந்த மன உளைச்சலை தந்துள்ளதாகவும் தனது புகாரில் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்பியை அச்சுறுத்தும் வகையில் பேசினால் தன்னால் எப்படி மக்கள் பணியாற்ற முடியும் என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பிய நிலையில் இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், தமிழக சட்டப்பேரவை தலைவர் தனபாலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாணிக் தாகூர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஓம்பிர்லா, விமர்சனம்,
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்