6 மாதத்தில் 68 முறை விபத்தில் சிக்கிய ''வந்தேபாரத் ரயில்''- மத்திய அமைச்சர் தகவல்

வியாழன், 15 டிசம்பர் 2022 (16:28 IST)
வந்தே பாரத் ரயில் இதுவரை எத்தனை முறை விபத்தில் சிக்கியுள்ளது என்பது குறித்து, மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பல முக்கிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

அந்த வகையில், இந்தியாவில் ரயில்சேவையை மேம்படுத்தும் விதமாக 75 நகரங்களை இணைக்கும் வண்ணம் வந்தே பாரத் விரைவு ரயில் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இதன்படி, 2019 ஆம் ஆண்டு டெல்லி – வாரணாசி இடையே வந்தே பாரத் திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த வந்தே பாரத் ரயில்கள் கால் நடைகள் மோதி தொடர்ச்சியாக அதன் பாகங்கள் சேதம் அடைவதாக விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில்,. தற்போது நடந்து வரும் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வந்தே பாரத் ரயில் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

ALSO READ: தொடரும் மோதல் சம்பவம்; மீண்டும் மாடு மீது மோதிய வந்தே பாரத் ரயில்!
 
இதற்குப் பதிலளித்த மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வின் வைஸ்ணவ்,  502 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த ரயில்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமுள்ளதாகவும், கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 68 முறை கால் நடைகள் மோதி வந்தேபாரத் ரயில்கள் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், இது உயர்தர எஃகினால் தயாரிக்கப்பட்டது ஆயினும் முன்பகுதி மட்டும் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது என்று தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj
 

வெப்துனியாவைப் படிக்கவும்