பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நீராட முடியாத பக்தர்களுக்காக, தீயணைப்பு வாகனங்கள் மூலம் 31,000 லிட்டர் தண்ணீரை உத்தரப் பிரதேச அரசு 75 மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, நொய்டாவுக்கு 10,000 லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பக்தர்களுக்கு விநியோகிக்க ட்ரம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ட்ரம்களில் கும்பமேளா தண்ணீரை வாங்கி, வீட்டிலேயே புனித நீராடி கொள்ளலாம் என்பதால் ஏராளமான மக்கள் இந்த தண்ணீரை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.