மசாலா வெச்சு சமையல் மட்டுமில்ல.. சாதனையும் செய்வோம்! – உத்தர பிரதேச மாணவி உலக சாதனை!

திங்கள், 21 டிசம்பர் 2020 (12:09 IST)
இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களை வைத்து கமகமவென மணக்கும் அழகான ஓவியத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார் உத்தர பிரதேச மாணவி.

உலகத்தில் உள்ள எந்த நாடுகளில் மசாலா என்று சொன்னாலும் நினைவுக்கு வருவது இந்தியாவாகதான் இருக்கும். சமையலுக்காக விதம் விதமாக பல மணங்களில் 300க்கும் அதிகமான மசாலா வகைகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறதாம். பல்வேறு விதமான வாசனைகளுக்காகவும், ருசிக்காகவும் பயன்படுத்தப்படும் மசாலாக்களை சமையலுக்கு பதிலாக ஓவியத்தில் பயன்படுத்தி சாதனை படைத்துள்ளார் கல்லூரி மாணவி ஒருவர்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நேஹா சிங் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலாக்களை பயன்படுத்தி 675 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான ஓவியத்தை வரைந்துள்ளார். இந்த சாதனைக்காக அவருக்கு கின்னஸ் விருது கொடுக்கப்பட்டுள்ளது. மசாலாவை வைத்து சமையல் மட்டுமல்ல சாதனையும் செய்யமுடியும் என நிரூபித்த மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்