மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்?

புதன், 6 ஜூலை 2022 (18:21 IST)
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: என்ன காரணம்?
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நிலையில் அவருடைய பதவியை நாளையுடன் நிறைவடைகிறது 
ஒரு மத்திய அமைச்சர் மக்களவை அல்லது மாநிலங்களவையில் கண்டிப்பாக எம்பியாக இருக்க வேண்டும் என்ற நிலையில் நாளையுடன் அவரது மாநிலங்களவை பதவி முடிவடைவதால் அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார் 
 
மேலும் அவர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்