இந்த பல்கலைகழங்களில் பட்டம் வாங்கினால் செல்லாது! – மானிய குழு பகீர் தகவல்!

வியாழன், 8 அக்டோபர் 2020 (10:31 IST)
இந்தியா முழுவதும் யூஜிசி சான்று பெறாமல் 24 பல்கலைகழகங்கள் போலியாக இயங்கி வருவதாக பல்கலைகழக மானிய குழு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பல்கலைகழகங்கள் பல்கலைகழக மானிய குழுவின் சான்று பெற்று இயங்கி வருகின்றன. இந்நிலையில் யூஜிசி சான்று இல்லாமலே சில பல்கலைகழகங்கள் தன்னிச்சையாக இயங்கி வருவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பல்கலைகழக மானியக்குழு நாடு முழுவதும் 24 பல்கலைகழகங்கள் யூஜிசி சான்று இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும், இந்த பல்கலைகழகங்களுக்கும் யூஜிசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

24 பல்கலைகழகங்களில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 8, டெல்லியில் 7, ஒடிசாவில் 2 மற்றும் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திராவில் தலா ஒன்று செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்கள் பெறும் பட்டமும் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படாது என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்