முதல்வர் பதவி வேணும்னா எடுத்துக்கோங்க..! – உத்தவ் தாக்கரே அறிவிப்பு!

செவ்வாய், 21 ஜூன் 2022 (15:36 IST)
மகாராஷ்டிராவில் 12 எம்.எல்.ஏக்கள் ஆதரவை பெற்ற ஏக்நாத் ஷிண்டேவால் ஆட்சி கவிழும் நிலை உள்ள நிலையில் பதவியை விட்டுத்தருவதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் முன்னதாக நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிந்த பிறகு கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.

அதுமுதல் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் சிவசேனாவில் கட்சி உட்பூசல் ஏற்பட்ட நிலையில் சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 12 பேரோடு சொகுசு விடுது ஒன்றில் அடைக்கலம் ஆகியுள்ளார். இந்த 12 எம்.எல்.ஏக்களை இழந்தால் சிவசேனா கூட்டணி பெரும்பான்மையை இழக்க வேண்டி வரும் என்பதால் ஏக்நாத் ஷிண்டேவிடம் சிவசேனா சமரசம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி கவிழாமல் இருக்க தனது முதல்வர் பதவியை விட்டுத்தரவும் உத்தவ் தாக்கரே தயாராக இருப்பதாக பேச்சு வார்த்தையின்போது சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்