பிரபல கன்னட நடிகர் விஜய் ஹீரோவாக அடிக்கும் இப்படத்தில், உதய் மற்றும் அனில் இருவரும் வில்லன் வேடம் ஏற்று நடித்துள்ளனர். இதன் கிளைமேக்ஸ் காட்சிக்காக, பெங்களூருக்கு அருகே உள்ள திப்பஹோண்டனஹள்ளி என்ற ஆற்றில், விஜய் மற்றும் இரு வில்லன் நடிகர்களும் ஹெலிகாப்டரில் இருந்து ஆற்றில் குதிப்பது போல் நேற்று படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தனர்.
அப்போது, முதலில் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்தனர். அதன் பின் விஜய் குதித்தார். இதில் விஜயை மட்டும், அங்கிருந்தவர்கள் சென்று காப்பாற்றிவிட்டனர். ஆனால், தண்ணீரில் தத்தளித்த உதய் மற்றும் அனில் ஆகியோர் நீரில் மூழ்கிவிட்டனர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை அவர்களின் உடலும் கிடைக்கவில்லை.
அனில் மற்றும் உதய் இருவரும் முறைப்படி நீச்சல் கற்றுக்கொள்ளாதவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், படபிடிப்புக் குழுவினர் பல விதிமுறைகளை மீறியதாக தெரிகிறது. இந்த சம்பவம், கன்னட சினிமா உலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.