தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகமான பின்னர், அதுவரை கொள்ளை லாபம் பார்த்து வந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் கண்டன. ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் ஏர்செல் தனது சேவையையே நிறுத்தி கொண்டது.
இந்த நிலையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஜியோ சிம்கார்டை அவுட்கோயிங், இண்டர்நெட் ஆகியவற்றுக்கு பயன்படுத்தி கொண்டு, மற்ற நிறுவனங்களின் சிம்கார்டுகளை வெறும் இன்கமிங் அழைப்புக்கு மட்டும் பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டது
இந்த நிலையில் மாதந்தோறும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக் கூடாது என செல்போன் ஆபரேட்டர்களுக்கு, டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் சேவையை நிறுத்துவது குறித்து 72 மணி நேரங்களுக்கு முன் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், டிராய் உத்தரவிட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்,