ரூ.3 லட்சத்திற்கு மேல் பணப் பரிமாற்றம் செய்ய தடை?

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (15:06 IST)
கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தும் வகையில், ரூ. 3 லட்சத்திற்கு மேல் தடை செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 

 
கறுப்புப் பணம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழு அளித்த பரிந்துரைப்படி இந்த முடிவை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்தக் குழு பரிந்துரைப்படி, ரூ. 15 லட்சத்திற்கு மேல் கொண்டு செல்ல தடை விதிப்பது குறித்து மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை.
 
இதற்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிரெடிட், டெபிட், செக் மற்றும் டிராப்ட் மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்படுவதை கண்டுபிடிக்க ரூ. 3 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
கணக்கில் வராத பணத்தை கண்டுபிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதுடன், பணம், கார் உள்ளிட்ட பல பொருட்கள் ரகசியமாக வாங்குவதை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்