இணையதள இணைப்பு உள்ளவர்கள் ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி., வெப்சைட்டிலும், மொபைலில் இணையதளம் வைத்துள்ளவர்கள் ரயில்வே ஆப்ஸ் மூலம் முன்பதிவு செய்துவருகின்றனர். ஆனால் இணையதள வசதி இல்லாதவர்கள் வெகுநேரம் ரயில்வே நிலையத்தில் காத்திருந்து, முன்பதிவு செய்யும் நிலை உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில் ரூ.3 செலவில் குறுஞ்செய்தி (SMS) அனுப்பி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போனில் இருந்து, '139' என்ற எண்ணுக்கு, முன்பதிவிற்கான தகவல்களை SMS அனுப்பி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.