ரயில் டிக்கெட் கட்டணத்தை தனியாரே நிர்ணயிக்கும்: ரயில்வே அதிரடி!

வியாழன், 13 பிப்ரவரி 2020 (13:48 IST)
ரயில் டிக்கெட் விலையை இனி தனியாரே நிர்ணயிக்கும் என ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கூறியுள்ளார். 
 
பயணிகளின் நலன் கருத்து இந்திய ரயில்வே இன்னும் ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் கூடுதலாக 1,500 முதல் 2000 ரயில்களை இயக்கும் என தெரிகிறது. இந்த கூடுதல் ரயில்களையும் அரசே நிர்வகிக்க முடியாத காரணத்தால் அவர் தனியாரிடம் வழங்கப்படும் என தெரிகிறது. 
 
இந்நிலையில் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் ரயில்களின் கட்டணத்தை தனியாரே நிர்ணையிக்கும் என தெரிகிறது. இது குறித்து ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கூறியதாவது, 
 
தனியாரால் இயக்கப்படும் பயணிகள் ரயில்களுக்கு கட்டண வரம்பு நிர்ணயிப்பது குறித்து அரசிடம் எந்த பரிசீலனையும் இல்லை. எனவே,  பயணிகள் ரயில்களை இயக்கவிருக்கும் தனியார் ரயில் நிறுவனங்கள் சந்தை நிலவரத்தைச் சார்ந்து தாங்கள் விரும்பும் எந்தக் கட்டணத்தையும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்