ஜனாதிபதி காரை நிறுத்திய ட்ராஃபிக் போலீஸ் ஹீரோவாக மாறினார்

செவ்வாய், 20 ஜூன் 2017 (14:57 IST)
பெங்களூரு சாலையில் குடியரசுத் தலைவரின் காரை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிட்ட போக்குவரத்துத்துறை காவலர் ஹீரோவாக மாறினார்.


 

 
கடந்த சனிக்கிழமை பெங்களூர் நகரில் மெட்ரோ க்ரீன் லைன் திறப்பு விழாவில் கலந்துக்கொள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்றிருந்தார். அவரை ட்ரினிட்டி பகுதி வழியாக பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் பெங்களூர் காவல்துறையினர்.
 
அப்போது ட்ரினிட்டி பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துத்துறை காவலர் ஒருவர், சற்று யோசிக்காமல் குடியரத் தலைவர் காரை தடுத்து நிறுத்தி அந்த வழியே கடக்க முடியாமல் நின்று கொண்டிருந்த ஆம்புலன்சுக்கு வழிவிட்டார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை பாராட்டினர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. 
 
மேலும் அந்த போக்குவரத்துத்துறை காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்