மக்களின் உயிரைவிட டாஸ்மாக் வருமானம் முக்கியமா? நீதிபதியின் காட்டமான கேள்வி

வியாழன், 14 மே 2020 (19:25 IST)
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது 
 
இன்றைய விசாரணையின்போது ’மது பழக்கம் ஒரு கொடிய நோய் என்றும் ஏழை எளிய மக்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பாலான பகுதியை அதற்கு செலவழிப்பதால் அத்தியாவசியமான பொருட்களை அவர்களால் வாங்க முடியவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதாடப்பட்டது. மேலும் தனிமனித இடைவெளியையும் டாஸ்மாக் முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை என்றும் அதனால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வாதாடப்பட்டது.
 
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ’டிஜிட்டல் முறையை பின்பற்றுவதற்கான நடைமுறையை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நாளொன்றுக்கு 500 டோக்கன் மட்டுமே கொடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசு காட்ட வழிகாட்டுதல் பின்பற்றப்படும் என்றும் உறுதி அளித்தார் 
 
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதிகள், டாஸ்மாக் நிர்வாகம் மட்டுமே பதில் மனு அளித்துள்ளதாகவும், அரசின் விரிவான மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் டாஸ்மாக் வழக்கில் மக்களின் உயிரை விட வருமானம் முக்கியமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசியல் சாசனத்தின் பாதுகாவலனாக இருக்கும் நீதிமன்றம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போகும் போது கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்றும் தெரிவித்தனர்
 
மேலும் இந்த வழக்கின் விசாரணையை நாளை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை இந்த வழக்கு மேலும் விசாரிக்கப்பட்டு டாஸ்மார்க் கடைகள் திறப்பது குறித்த வழக்கின் தீர்ப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்