சூரியனுக்கும், நிலவுக்கு இடையே பூமி நேர்கோட்டில் வரும்போது சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இந்த முறை நிகழும் சந்திரகிரகணத்தை நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் வெறும் கண்களால் காண முடியும். இந்த சந்திர கிரகணம் பகுதியளவு சந்திர கிரகணம் (Partial Lunar Eclipse) எனப்படுகிறது. அதாவது பூமியின் நிழல் சந்திரனை முழுவதும் மறைக்காமல் குறிப்பிட்ட அளவு மட்டுமே மறைக்கும். நள்ளிரவு 1.30 மணியளவில் கிரகணம் தொடங்கும். அதிகாலை 4.30 வரை சந்திர கிரகணம் நடைபெறும்.
இந்த சந்திர கிரகணத்தை ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் உள்ள பெருவாரியான மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து காணமுடியும். முழுமையான சந்திர கிரகணம் 2021ல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.