இந்நிலையில் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி அளித்திருந்த மனுவை விசாரிப்பதற்காக காதல் ஜோடி நீதிமன்றம் அழைக்கப்பட்டிருந்தார்கள். இன்று காலை நீதிமன்றம் வந்த சாக்ஷி, அஜிதேஷ் தம்பதியினரை துப்பாக்கி காட்டி மிரட்டியது ஒரு கும்பல். பிறகு அஜிதேஷை மட்டும் ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு எஸ்கேப் ஆகியது அந்த மர்ம கும்பல். சிசிடிவி கேமராவில் பதிவாகிய காரின் நம்பரை வைத்து காரை தேடி வருகின்றனர் போலீஸ். இது தனது தந்தையின் வேலைதான். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாக்ஷி போலீஸில் புகார் அளித்துள்ளார்.