இன்று ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்: பாஜக வெற்றிவாகை சூடுமா?

செவ்வாய், 1 டிசம்பர் 2020 (07:33 IST)
ஐதராபாத் மாநகராட்சிக்கு இன்று தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து அந்த மாநகராட்சியை பாஜக கைப்பற்றும் என்ற தகவல் தற்போது கசிந்து வருகிறது 
 
கடந்த சில நாட்களாக ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்றது. குறிப்பாக பாஜக தலைவர்கள் ஐதராபாத் முழுவதும் சுற்றி வாக்குகளை சேகரித்தனர் 
 
இன்று ஐதராபாத் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இன்றைய தேர்தலில் ஐதராபாத் மாநகராட்சியில் மொத்தம் 150 வார்டுகள் உள்ளன அனைத்து ஆடுகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் ஆயிரத்து 112 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பதும் சுமார் 75 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஐதராபாத் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெறுவதை அடுத்து போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்றும் செல்போன்களை வாக்குப்பதிவு மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
அதேபோல் இன்று ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்