நாடு முழுவதும் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம்.. கிருஷ்ணருக்கு படையலிட்டு வழிபாடு.. !!

புதன், 6 செப்டம்பர் 2023 (20:40 IST)
இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்பட்டதை அடுத்து வீடும் முழு ஒவ்வொரு வீட்டிலும் பிரசாதங்களை படையலிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
 
 தர்மம் தலைக்கவும். அதர்மம் வீழவும் கண்ணன் அவதரித்த நாள் தான் கிருஷ்ண ஜெயந்தி.  ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி தேதியில் நள்ளிரவு நேரத்தில் தான் கண்ணன் அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது. 
 
தேவகியின் வயிற்றில் குழந்தையாக சிறையில் பிறந்து வெண்ணை திருடி குறும்புகள் செய்யும் பாலகனாக கண்ணன் வளர்ந்தார் 
 
குழந்தையாகவும் காதலனாகவும் இருந்த கண்ணன்,  பகவத் கீதையை உரைத்தபோது ஞானி ஆக காட்சி அளித்தார். இந்த நாளில் கண்ணனை வணங்கினால் கவலை தீரும் என்றும் மகிழ்ச்சிகள் கிடைக்கும் என்றும் வாழ்க்கையை வழிநடத்த சாரதியாக கண்ணன் துணை என்றும் இருக்கும் என்பதே கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்