உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்து நாடே கொந்தளித்து உள்ள நிலையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசத்திற்கு இன்று மதியம் கிளம்பினார். அவர்களுடைய கார் காவல் துறையினரால் தடுக்கப்பட்டது மட்டுமின்றி அவர்கள் திரும்பிப் போகும்படி அறிவுறுத்தப்பட்டனர்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி இதுகுறித்து றியதாவது: உத்தரபிரதேசத்தில் ராகுல்காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வேதனையளிக்கிறது. ஜனநாயக கடமையை ஆற்ற முயன்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தி, கைது செய்த காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது - கே.எஸ்.அழகிரி| உ.பி.யில் ராகுல், பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெறும்
முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் கூறியதாவது: வன்முறை இல்லை, ஆயுதம் இல்லை, அமைதி போராட்டத்தை தடுத்தது ஏன்?; அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க முயன்றதில் என்ன தவறு?; நாட்டின் சட்டங்கள் உத்தரப்பிரதேச காவல்துறைக்கு பொருந்தாதா?"