விலை ஏறுகிறது திருப்பதி லட்டு

சனி, 5 செப்டம்பர் 2015 (11:07 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டுவின் விலையை உயர்த்த திருப்பதி தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவசமாகவும், சலுகை வகையில் கூடுதல் விலைக்கும் லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதியில், ரூ.10க்கு இரண்டு லட்டு வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக தேவைப்படும் பக்தர்களுக்கு ஒரு லட்டு ரூ.25க்கு வழங்கப்படுகிறது. தினமும் 3 லட்சம் லட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு லட்டு தயாரிக்க ரூ.38 வரை செலவாகிறதாம். இதனால் லட்டு விற்பனை தொடந்து நஷ்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால் லட்டு விலையை உயர்த்துவது குறித்து அறங்காவலர் குழு ஆலோசித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்