திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 மணிநேரம் நடை சாத்தப்படுகிறது: என்ன காரணம்?

புதன், 12 அக்டோபர் 2022 (08:09 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நடை 12 மணி நேரம் சாத்தப்படும் என்றும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தை ஒட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 
அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணமும் நவம்பர் 8-ஆம் தேதி சந்திர கிரகணம் அடுத்தடுத்து வர இருப்பதை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவில் கிரகணத்தின் போது நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அக்டோபர் 25-ந் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ இருப்பதால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் நடை சாத்தப்படும்
 
அதேபோல் நவம்பர் 8-ந் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளதால் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும்
 
இந்த அறிவிப்பை பொருத்து பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்ய திட்டமிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்