வெங்காய மூட்டையை திருடும் இளைஞர்கள்: வைரலாகும் வீடியோ

ஞாயிறு, 17 நவம்பர் 2019 (17:16 IST)
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை தங்கத்தின் விலை போல் உயர்ந்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர தரப்பு மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
 
வட இந்தியாவில் ஒரு கிலோ வெங்காயம் ஏறக்குறைய ரூ.100க்கு விற்கப்படுவதாக அதிர்ச்சிதரும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஒரு வெங்காய மூட்டையையே இளைஞர்கள் குரூப் ஒன்று திருடும் சிசிடிவி வீடியோ பெரும் வைரலாகி உள்ளது
 
ஒரு இருசக்கர வாகனத்தில் வரும் மூன்று இளைஞர்களில் ஒருவர் கடையில் ஒரு பொருளை வாங்குவது போல் நடிக்கின்றார். கடைக்காரர் பொருளை எடுத்து கொடுத்துவிட்டு, பின்னர் அந்த இளைஞரிடம் பணத்தை வாங்கிவிட்டு மீதி சில்லரையை எடுக்கும்போது, அங்கு தயாராக இருந்த இன்னொரு இளைஞர் வெங்காய மூட்டையை எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று விடுகிறார். பொருளை வாங்கிய இளைஞர் மீதி சில்லரையை வாங்கிவிட்டு சாவகாசமாக செல்கிறார்.
 
அந்த வீடியோவை வெங்காய மூட்டை திருடி போனதை கடைசிவரை கடைக்காரர் கவனிக்கவில்லை. வெங்காயத்தின் விலை அதிகமாக இருக்கும் நிலையில் வெங்காயத்தை மூட்டையுடன் திருடிய வாலிபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்