பெங்களூரு வந்த 3 பேருக்கு கொரோனா: வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் நிறுத்தப்படுமா?

வியாழன், 29 டிசம்பர் 2022 (11:39 IST)
வெளிநாடுகளிலிருந்து இன்று பெங்களூரு திரும்பிய 3 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
 
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு கொரோனா அலைகள் ஏற்பட்டதற்கு ஒரே காரணம் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளால் தான் என்றும் அதனால்தான் இரண்டு வருடங்கள் லாக்டோன் போன்ற அவஸ்தையை இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அனுபவித்தனர் என்றும் கூறப்படுகிறது.
 
எனவே மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்படுவதை தடுப்பதற்கு உடனடியாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என்றும் அப்போது தான் இந்தியாவில் உள்ள மக்களை காப்பாற்ற முடியும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்க படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்