சமீபத்தில் கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியம் 2 திருமண திட்டங்களைத் தொடங்க அரசிடம் ஒப்புதல் பெற்று உள்ளது. அதில் ஒன்று ஏழை பிராமண பூசாரிகளை திருமணம் செய்யும் 25 பெண்களுக்கு தலா 3 லட்சம் நிதி உதவி வழங்குதல். இன்னொன்று பொருளாதார ரீதியில் பலவீனமாக இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் வழங்குதல் ஆகிய இரண்டு திட்டங்களை அறிவித்துள்ளது
இந்த இரண்டு திட்டங்களுக்கான நிதி ஒதுக்குவது குறித்த நடைமுறைகளை மேற்கொண்டு வருவதாக இந்த வாரியத்தின் தலைவர் சச்சிதானந்த மூர்த்தி என்பவர் தெரிவித்துள்ளார். ஏழை பிராமண பூசாரிகள் மற்றும் பிராமண பெண்கள் 30 வயதுக்கு மேல் பலர் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர் என்பதும் அவர்களுடைய நல்வாழ்விற்காக இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்