குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி : கத்தியால் குத்திக்கொன்ற கணவன்

ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (12:14 IST)
தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை அவரின் கனவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தேவதானப்பட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் வசிப்பவர் மணிகண்டன். இவர் கடந்த 2011ம் ஆண்டு தீபா என்பவரை திருமனம் செய்தார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் இருவரும் வேலை செய்து வந்தனர். அதே கம்பெனியில் வேலை செய்த கீதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை மணிகண்டன் 2வது திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருடனும் மணிகண்டன் வாழ்ந்து வந்தார்.
 
கடந்த ஒருவருடத்திற்கு முன்பு மணிகண்டனும் சண்டை போட்டுக்கொண்டு தனது குழந்தைகளுடன் தேவதானப்பட்டிக்கு வந்துவிட்டார். 
 
இந்நிலையில், தீபாவை மீண்டும் திருப்பூருக்கு அழைத்து செல்வதற்காக நேற்று காலை மணிகண்டன் தேவதானப்பட்டிக்கு வந்தார். ஆனால், அவர் எவ்வளவு வற்புறுத்தியும் அவருடன் செல்ல தீபா மறுத்துவிட்டார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால் தீபாவை சராமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்த தீபா ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
அதன் பின் மணிகண்டன் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். கணவனே மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்