மம்தா பானர்ஜியை தோற்கடித்த சுவேந்து அதிகாரி மீது திருட்டு வழக்கு!

ஞாயிறு, 6 ஜூன் 2021 (08:59 IST)
மம்தா பானர்ஜியை தோற்கடித்த சுவேந்து அதிகாரி மீது திருட்டு வழக்கு!
சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்காள மாநில சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரி மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தை தாக்கிய யாஷ் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்க மேற்குவங்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நிவாரணம் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த நிலையில், அந்த நிவாரண பொருட்களை பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியும் அவரது சகோதரரும் திருடி விட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது
 
இந்த புகாரின் அடிப்படையில் சுவேந்து அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் இந்த புகாருக்கு முகாந்திரம் இருந்தால் கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாகவும் மேற்குவங்க மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்