இது தொடர்பாக அந்த பெண் ஜாமியா நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக, அமானத்துல்லா கான் மீது கற்பழித்து விடுவதாக அச்சுறுத்துதல், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு, விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக கூறி அவரை ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் கைது செய்தனர்.
இதுபற்றி அவர் கூறும்போது, சம்பந்தப்பட்ட பெண் எனது வீட்டுக்கு வந்ததே தெரியாது. பா.ஜனதாவினர் தூண்டுதலின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்றார். இந்நிலையில் தனது கட்சி எம்.எல்.ஏ. கைதுக்கு கண்டனம் தெரிவித்த, முதலமைச்சர் கெஜ்ரிவால், பிரதமர் மோடி மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வை கைது செய்துள்ளார் என்று விட்டரில் கேலியாக குறிப்பிட்டார். இதற்கு பதிலடி கொடுத்து டுவிட்டர் பதிவில் கெஜ்ரிவால் “குஜராத்தில் ஆனந்தி பென் அரசு தலித்துகளையும், படேல் இனத்தவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்புகிறது. மோடி அரசு டெல்லிவாசிகள் மீது போலி வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது”. என்று கூறியுள்ளார்.