ஜனாதிபதி வேட்பாளர்: பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்?

வெள்ளி, 26 மே 2017 (07:20 IST)
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியாகும் வேட்பாளரை தேர்வு செய்ய எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை முடிவு செய்ய இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.



 


குடியரசுத் தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் பாஜக சார்ப்பில் தற்போது ஜார்க்கண்ட் ஆளுநராக உள்ள திரௌபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் ஒரு மெகா கூட்டணியை அமைத்து அப்துல்கலாம் போல ஒரு பொதுவேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்த ஆலோசனைகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுடன் நடத்தி வருகிறார். அனேகமாக காங்கிரஸ் சார்பில் மீராகுமார் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்