நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளி.! முடங்கிய நாடாளுமன்றம்..!!

Senthil Velan

வெள்ளி, 28 ஜூன் 2024 (13:09 IST)
நீட் முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
 
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு துவங்கும். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது குறித்து மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,  மாணவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., சுப்ரியா சுலேவும், நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

ஆனால் இதனை ஏற்க சபாநாயகர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்ததால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதால், அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து அவை கூடிய போது மீண்டும் அமளி நிலவியதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

ALSO READ: மாணவர்களுக்கு ஊக்கத்தொகை..! விஜயை புகழ்ந்து தள்ளிய சீமான்..!
 
மாநிலங்களவையிலும் நீட் முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தின. மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் மாநிலங்களையும் முடங்கின.
நீட்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்