விபத்தில் பலத்த காயமடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்க பணமில்லாமல் சஞ்சு தேவி அவதிப்பட்டு வந்துள்ளார். கணவரின் சிகிச்சைக்காக பல்வேறு இடத்தில் பணத்தை புரட்ட முயற்சித்துள்ளார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. கணவரின் உயிரா அல்லது குழந்தையா என பார்க்கும் போது கணவன் தான் முக்கியம் என முடிவு செய்து பிரோக்கர் ஒருவரிடம் ரூ.42 ஆயிரத்துக்கு அண்மையில் பிறந்த குழந்தையை விற்றுள்ளார். அந்த பணத்தை மருத்துவமனையில் செலுத்தி கணவரின் உயிரை காப்பாற்றினார். இந்த விஷயம் வெளியே கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.