இனிவரும் வாரங்களில் கொரொனா தாக்கம் கொடூரமாக இருக்கும் !

புதன், 5 மே 2021 (23:15 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் பரவிவருகிறது.

இந்தியாவில் கொரொனா வைரஸ்  இரக்கமே இல்லாமல் கொடூரமாய்ப் பரவிவருகிறது. இதிலிருந்து மக்களைப் பாதுக்காக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து  பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரொனா பாதிப்பு இரட்டிப்பு ஆகும் எனக் கொரொனா ஆராய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது ஒரு நாளைக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த 24 மணிநேரத்தில் 3 ,82,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 3,38,439 பேர் இத்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 34,87,229 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மேற்கத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறும்போது,  அடுத்த 4 முதல் 6 வாரங்களுக்கு இந்தியாவில் கொரொனா பாதிப்பு கடினமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்குதான் இறப்பு விகிதங்களைக் குறைப்பதற்கான ஒரே வழி எனத் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்