காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வியாழக்கிழமை நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவும் தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவிட தயாராக உள்ளதாக தெரிவித்தது. இந்தியாவும் அடுத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலை பாகிஸ்தான் மீது நடத்த ஆயத்தமானது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது... ’இந்தியா தாக்கினால் நாங்களும் பதிலடி கொடுக்க தயார் என்று தெரிவித்தார்.
இந்த தாக்குதல் விவகாரத்தில் லேசர் உதவியுடன் தான் சரியான இலக்குகளை குறிவைத்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது . இது தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா எடுத்த முயற்சிகளுக்கு தக்க பலன் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இன்று நடைபெற்ற 21 நிமிட தாக்குதலில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் முகாமிட்டிருந்த அத்துனை தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.