கேரளாவில் ஆயுர்வேத மற்றும் சுற்றுலாத்துறை தூதராக டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப் நியமனம்

வியாழன், 25 ஜூன் 2015 (00:42 IST)
கேரள அரசின் ஆயுர்வேத மருத்துவத்துறை விளம்பர தூதராக ஸ்டெபி கிராப் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

 
டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்தவர் ஸ்டெபி கிராப். ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்க குடியுரிமை பெற்றவர். டென்னிஸ் உலகில் சுமார் 107 போட்டிகளில் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். அவற்றில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களாகும்.
 
கடந்த 1999 ஆம் வருடம் டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாடினார். தற்போது, தனது  கணவர் ஆன்ட்ரி ஆகாஸியுடன், சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
 
இந்நிலையில், கேரள அரசின் ஆயுர்வேத மருத்துவத்துறை விளம்பர தூதராக ஸ்டெபி கிராப் நியமிக்கப்பட்டுள்ளார்.  கேரள அமைச்சரவை கூடிய போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்