தொலைபேசி அழைப்புகளை, பெயருடன் காண்பிக்கும் முறை விரைவில் அமல்: டிராய் அறிவிப்பு

புதன், 16 நவம்பர் 2022 (12:10 IST)
அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் பெயருடன் காண்பிக்கும் முறை விரைவில் அமல் செய்யப்பட வேண்டும் என டிராய் தகவல் தெரிவித்துள்ளது.
 
தொலைபேசி அழைப்புகளை பெயருடன் காண்பிக்க வேண்டும் என தொலைபேசி நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு புதிய விதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தொலைபேசி அழைப்பை அழைக்கப்படும் நபருக்கு பெயருடன் காண்பிக்க வேண்டும் என்ற புதிய விதியை அமல் படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 தற்போது தொலைபேசி அழைப்பில் அழைக்கும் நபர் யார் என்பதை கண்டு பிடிப்பதற்கு வசதியாக ட்ரூகாலர் உள்பட பல செயலிகள் இருக்கும் நிலையில் இந்த விதி அமல் செய்யப்பட்டால் அந்த செயலிகளின் தேவை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பயனர்களிடம் இருந்து பெரும் கேஒய்சி தரவுகளின் அடிப்படையில் தொலைபேசி அழைப்புகளை பெயருடன் காண்பிக்க முடியும் என்றும் இதை கண்டிப்பாக அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்