கடுமையான நிதி நெருக்கடிகள் காரணமாக புத்தாண்டிலிருந்து தொலைதொடர்பு நிறுவனங்கள், தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்டவற்றுக்கான கட்டணத்தை, 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன என் அதகவல் வெளியாகியுள்ளது.
வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனம் இந்த கட்டண உயர்வை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி நெருக்கடி மற்றும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் சரிவு உள்ளிட்ட காரணங்களால், கட்டணத்தை உயர்த்தாமல் இப்படியே சமாளிப்பது கடினம் என தொலைத்தொடர்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.