பள்ளி ஆசிரியைக்கு இ-மெயிலில் பலாத்கார மிரட்டல் விடுத்த 7 ஆம் வகுப்பு மாணவன்

வியாழன், 22 பிப்ரவரி 2018 (16:12 IST)
வகுப்பு ஆசிரியையும், அவரது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்வேன் என இ-மெயில் வாயிலாக மாணவன் ஒருவன் மிரட்டிய சம்பவம் ஒன்று அரியானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
 
அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் நகரத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தனது வகுப்பு ஆசிரியையும் மற்றும் அதே வகுப்பில் படிக்கும் அவரது மகளையும் பலாத்காரம் செய்வதாக இ-மெயில் வாயிலாக மிரட்டியுள்ளான்.
 
இந்த மிரட்டல் குறித்து ஆசிரியை அளித்த புகாரில் சமந்தப்பட்ட மாணவனை பள்ளியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளனர். மேலும் மாணவனுக்கு உளவியல் தொடர்பான ஆலோசனை கொடுக்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்