சமூக வலைத்தளங்களில் தருணின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தனது கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துவருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த தருண்விஜய், தன்னுடைய பேச்சுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
''நான் தவறான எண்ணத்தில் சொல்லவில்லை. என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கருப்பு கிருஷ்ணரையும் நாங்கள் வழிபடுகிறோம். பல்வேறு கலாச்சாரம், பண்பாடு கொண்ட மக்களுடன் வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணத்தில்தான் கூறி இருந்தேன். நான் கூறியிருக்கிற கருத்து யாரையாவது பாதித்து இருந்தால் மன்னிக்கவும்'' என்று பதிவிட்டுள்ளார். தருண்விஜய் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.